என்ட்ரி கொடுத்தாச்சு அடுத்து என்ன பண்ணலாம்னு மல்லாக்க படுத்து யோசிக்கலாம்னு இருக்கய லைட்ட சாச்சேன். எனக்கு பின்னாடி உக்காந்திருந்த ஒரு பன்னாட"ஹே மேன், வாட்ச் இட்" ன்னு சொல்றான். ஏண்டா கபோதி இம்மாம் பெரிய ஆப்பீஸ்ல கொஞ்ச தள்ளி தான் உக்கரேண்டா!!
சரி பின்னாடி சாஞ்சு தான் யோசிக்க முடில, முன்னாடி சாஞ்சு யோசிபோம்னு லைட்ட சாஞ்சேன். ஏண்டா ஆப்பீஸ் நேரத்தில தூங்கறேனு தூரத்திலிருந்து ஒரு இடி முழக்கம். வேற யாரும் இல்ல, அது நம்ம மேனேஜர் தான். என்னடா சோதன இது, ஏற்கனவே நமக்கு தண்ட சோறு னு ஒரு பேர் இருக்கு, இதுல இது வேறயா..
விட்றா, விட்றா போது வாழ்கைனு வந்துட்டா , இதெல்லாம் பாஎஸ் பண்ணி தான் ஆகணும்.. சரி இப்ப எப்டி உக்காந்து யோசிக்கலாம்னு அப்டியே உக்காந்து யோசிச்சேன். கொஞ்ச நேரத்தில அப்டியே தூங்கிட்டேன்.. அது என்ன மாயமோ மந்த்ரமோ தெரில, எப்ப யோசிக்க ஆரம்பிச்சாலும் தூங்கிடறேன். இது காலேஜ் டேஸ்ல இருந்து எனக்கு இருக்கற ஒரு நல்ல பழக்கம். இன்னைக்கும் அப்டியே தூங்கிட்டன, எழுந்து பாக்றேன்.. கிளிஎன்ட் கிட்ட இருந்து ஆறு மெயில், நம்ம மேனேஜர் கிட்ட இருந்து ரெண்டு மெயில்.
கிளிஎன்ட் மண்டையன் , அவனுக்கு ஏதோ ப்ராப்ளம் னு ஒரு மெயில் , அபால அது ஏன் இனும் சால்வ் ஆகலேனு ஒரு மெயில், அபால இன்னுமா சால்வ் பன்னலேனு இன்னொரு மெயில்.. ஏண்டா இன்னும் சால்வ் பன்னலேனு நம்ம மேனேஜர் வேற டேமேஜற ஒரு மெயில். ஏண்டா கபோதி கிளிஎன்ட் எனக்கு எதாவது ப்ராப்லம்ன நான் உங்கிட்டய சொல்றேன்.. நீ மட்டும் ஏண்டா இப்டி இன்டீசெண்ட நடந்த்துகர..
என்னடா இப்டி ப்ளாக் எழுத ஆரம்பிச்ச பர்ஸ்ட் நாளே இப்டி ஆப் வேக்கரானுங்க.. இது நல்ல சகுனமா இல்ல, உஷார் பங்காளின்னு வார்னிங் இன்பர்மேஷனா!!!! தெரிலயேப்பா...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
intha maathiri elaam katha eluthineena oru naayum padikaathu.. urupadiya ethavathu eluthu.
Post a Comment