Thursday, May 22, 2008

எப்படி என்ட்ரி கொடுக்கலாம்!!!

என்ட்ரி கொடுத்தாச்சு அடுத்து என்ன பண்ணலாம்னு மல்லாக்க படுத்து யோசிக்கலாம்னு இருக்கய லைட்ட சாச்சேன். எனக்கு பின்னாடி உக்காந்திருந்த ஒரு பன்னாட"ஹே மேன், வாட்ச் இட்" ன்னு சொல்றான். ஏண்டா கபோதி இம்மாம் பெரிய ஆப்பீஸ்ல கொஞ்ச தள்ளி தான் உக்கரேண்டா!!

சரி பின்னாடி சாஞ்சு தான் யோசிக்க முடில, முன்னாடி சாஞ்சு யோசிபோம்னு லைட்ட சாஞ்சேன். ஏண்டா ஆப்பீஸ் நேரத்தில தூங்கறேனு தூரத்திலிருந்து ஒரு இடி முழக்கம். வேற யாரும் இல்ல, அது நம்ம மேனேஜர் தான். என்னடா சோதன இது, ஏற்கனவே நமக்கு தண்ட சோறு னு ஒரு பேர் இருக்கு, இதுல இது வேறயா..

விட்றா, விட்றா போது வாழ்கைனு வந்துட்டா , இதெல்லாம் பாஎஸ் பண்ணி தான் ஆகணும்.. சரி இப்ப எப்டி உக்காந்து யோசிக்கலாம்னு அப்டியே உக்காந்து யோசிச்சேன். கொஞ்ச நேரத்தில அப்டியே தூங்கிட்டேன்.. அது என்ன மாயமோ மந்த்ரமோ தெரில, எப்ப யோசிக்க ஆரம்பிச்சாலும் தூங்கிடறேன். இது காலேஜ் டேஸ்ல இருந்து எனக்கு இருக்கற ஒரு நல்ல பழக்கம். இன்னைக்கும் அப்டியே தூங்கிட்டன, எழுந்து பாக்றேன்.. கிளிஎன்ட் கிட்ட இருந்து ஆறு மெயில், நம்ம மேனேஜர் கிட்ட இருந்து ரெண்டு மெயில்.

கிளிஎன்ட் மண்டையன் , அவனுக்கு ஏதோ ப்ராப்ளம் னு ஒரு மெயில் , அபால அது ஏன் இனும் சால்வ் ஆகலேனு ஒரு மெயில், அபால இன்னுமா சால்வ் பன்னலேனு இன்னொரு மெயில்.. ஏண்டா இன்னும் சால்வ் பன்னலேனு நம்ம மேனேஜர் வேற டேமேஜற ஒரு மெயில். ஏண்டா கபோதி கிளிஎன்ட் எனக்கு எதாவது ப்ராப்லம்ன நான் உங்கிட்டய சொல்றேன்.. நீ மட்டும் ஏண்டா இப்டி இன்டீசெண்ட நடந்த்துகர..

என்னடா இப்டி ப்ளாக் எழுத ஆரம்பிச்ச பர்ஸ்ட் நாளே இப்டி ஆப் வேக்கரானுங்க.. இது நல்ல சகுனமா இல்ல, உஷார் பங்காளின்னு வார்னிங் இன்பர்மேஷனா!!!! தெரிலயேப்பா...

லண்டனில் ஒரு தண்டசோறு

எனது இந்த புதிய முயற்சியை வேடிக்கை பார்க்க வந்திருக்கும் அனைத்து நல்லுங்களுகும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

என்னை பற்றி தெரிந்து கொள்ள நீங்க எனது 'அபௌட் மீ' பகுதியை பார்க்கலாம், ஆனால் அங்கு அவ்வளவு விஷயங்கள் இருக்காது, ஏனெனில் நான் ஒரு தன்னடக்ம் நிறைந்த மானஸ்தன்.

என்னை பற்றி என் நண்பர்களிலடிம் நீங்கள் கருத்து கேற்று தெரிந்து கொள்ளலாம்.. ஆனால் இனிமேல தான் நான் இங்கு புது நண்பர்கள் பிடிக்க வேண்டும், எனக்கு இங்கே தெரிஞ்ச ஒரே ஒரு நல்லவர், வல்லவர் நாளும் தெரிஞ்சவர் என்று தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் இம்சை அரசி அக்கா தான்.

அவர் அனேகமாக என்னை பற்றி பீலா தான் விடுவார்.. ஆதலால் நானே எனை பற்றி சொல்கிறேன்...நான் மதுரையில் பிறந்து கோவையில் கல்வி பயின்று பெங்களூரில் ட்ரைனிங் முடித்து சென்னையில் பணியில் சேர்ந்து வெட்டியாக இரண்டரை ஆண்டுகள் கழித்து இபொழுது ஒரு மொக்க கிளிஎன்ட் காக ஒரு மொக்க ப்ராஜெக்ட்இல் லண்டனில் ஒரு மொக்க வேல பாத்திட்டு இருக்கும் ஒரு சாதரண மென்பொருள் பொறியாளர்.

எனது இந்த எழுதார்வத்தை தூண்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியை மறுபடியும் தெரிவித்து கொள்கிறேன்..

இனிமேல நேரம் கிடைக்கும் போதெலாம் இங்கு வந்து எதாவது பீலா விட்டு செல்ல முயற்சி செய்கிறேன்.. என்னையும் உங்கள் வீட்டு பிள்ளை போல் பாவித்து உங்கள் சங்கங்கள்இல் சேர்த்து கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்..

இபோதைக்கு அவ்ளோதான் , மீதி அபால..

Thursday, March 22, 2007

first entry

I ve entered the blogs at last...
Well not exactly for the first time, but yes, first blog appearence over the internet...
(applause,applause,applause,applause............)
(all girls shoutin my name in high pitch voice......)